பெண்களின் கருவளத்தை பாதிக்கும் விஷயங்கள்

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் காலம் என்றால் அது கர்ப்ப காலமும், பிரசவ காலமும் தான். ஆனால் அத்தகைய தாய்மையை இன்றைய தலைமுறையினர் பலரால் பெற முடிவதில்லை. இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

ஒருசில காரணிகள் தான் ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதித்து, குழந்தைப் பெற்றெடுக்கும் தன்மையை பாதிக்கிறது. அத்தகைய காரணிகள் என்னவென்று தெரிந்து கொண்டால், நிச்சயம் குழந்தைப் பெற்றெடுப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சரி, இப்போது ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள் என்னவென்று பார்ப்போம்.

மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமன் நோய்களுக்கு மட்டும் வழிவகுப்பதோடு, குழந்தைப் பெற்றெடுப்பதிலும் இடையூறை ஏற்படுத்தும். எனவே பெண்கள் எப்போதும் தங்களது உடல் எடையைச் சிக்கென்று பராமரிக்க வேண்டியது அவசியம்.

%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf

வயதும் பெண்களின் கருவளத்தைப் பாதிக்கும். பொதுவாக 23-40 வயது வரை பெண்களால் கருத்தரித்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே பெரும்பாலான தம்பதிகள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குழந்தையைத் தள்ளிப் போடுகின்றனர். இப்படி பெண்கள் குழந்தைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப் போட்டால், அவர்களின் கருப்பை வயது அதிகரிக்க அதிகரிக்க பலவீனமாகி, பின் கருத்தரிப்பதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

வயது அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைய ஆரம்பிக்கும். ஒருவருக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைந்தால், குழந்தைப் பெற்றெடுப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

பெண்களுக்கு பாலியல் நாட்டம் குறைந்தால் மட்டும் குழந்தைப் பெற்றெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதில்லை, மனைவியை முழுமையாக சந்தோஷப்படுத்தாத கணவனாலும் குழந்தைப் பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே திருமணத்திற்குப் பின் ஒவ்வொரு பெண்ணும், ஆணும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் காண்பிக்க வேண்டும்.

பெண்களின் கருவளத்தை வீட்டில் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்களும் பாதிக்கும். அதிலும் கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்களை சுவாசிக்கும் போது, அந்த வாயுக்கள் நேரடியாக கருவளத்தைப் பாதிக்கும்.