விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த்தின் கலைவாரிசாக சண்முக பாண்டியன் உருவெடுத்திருக்கிறார். `சகாப்தம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிய சண்முக பாண்டியன் தற்போது ‘தமிழன் என்று சொல்’ என்ற புதுப்படத்தில் பிஸியாகிவிட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இவரின் இரண்டாவது திரைப்படம் `மதுரவீரன்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. மதுரவீரன் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்த படத்தின் வேலைகள் தொடர்பாகவும் நடிப்பு பயிற்சிக்காகவும் வெளிநாடு சென்றுவிட்டார்.
ஏழு மாதங்கள் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் கழித்த சண்முக பாண்டியன், விஜயகாந்த்தின் 40 ஆண்டுக்கால கலைத்துறை சேவைக்கான விழாவுக்குக்கூட வரவில்லை.
வெளிநாட்டில் இருந்தபடியே தன் தந்தைக்கு வாழ்த்துக் கூறும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தினார். தன் தந்தையின் கண்களைக் கையில் டாட்டுவாக வரைந்து வைத்திருந்ததையும் அந்த வீடியோவில் காட்டினார்.
அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. ஏழு மாதங்களுக்குப் பின் இந்தியா திரும்பிய சண்முக பாண்டியன் ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்புப் பணிகளில் மீண்டும் பிஸுயாகிவிட்டார்.
அண்மைக் காலமாகவே நெதர்லாந்தில் எடுத்த புகைப்படங்களை சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அந்தத் தருணங்களை மிஸ் செய்வதாகக் குறிப்பிட்டுவருகிறார்.
தன் வாழ்நாளிலே சிறந்த நாள்கள் என்று நெதர்லாந்தில் வாழ்ந்த 7 மாத காலத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் கேப்டன் மகனுக்கு ஓர் உயிர்த் தோழி கிடைத்திருப்பதுதான் இந்த நெதர்லாந்து மீதான பாசத்துக்கு காரணம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இன்று அந்த உயிர்த் தோழிக்குப் பிறந்தநாள். எனவே தன் தோழிக்கு இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வாழ்த்து கூறியிருக்கிறார் சண்முக பாண்டியன். இந்தப் புகைப்படம்தான் இன்று டாக் ஆஃப் தி டவுன்!