பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் தகுதி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் அரசாங்க தரப்பின் பொது வேட்பாளராக கிரிக்கெட் வீரர் குமார சங்ககாரவை களமிறக்க போவதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இவர் ஒரு சிறந்த மனிதர் என்பதால் அரசியலுக்கு வருவதற்கான எவ்வித தகுதிகளும் இவருக்கு கிடையாது.
நாம் தொடர்ந்தும் முறையற்ற அரசியல் சூழலிலே வாழ்ந்து வருகின்றோம். இராணுவத் தளபதியாக இருந்த என்னை இன்று பாதாள குழுவினரது பாதுகாப்பாளனாக சித்தரித்த அரசியல் நாளை இவரையும் முழுமையாக மாற்றிவிடும்.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதே எமது நோக்கம்.
அதற்காக பொது வேட்பாளரை களமிறக்க கூடாது. கடந்த 2015 மேற்கொண்ட தவறினை 2020 ம் ஆண்டும் ஐக்கிய தேசிய கட்சி தொடரக் கூடாது எனக் கூறியுள்ளார்.