பேய் இல்லை என்பவர்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும்

பேய் போன்ற அமானுசியம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரியாத நிலையில் குறித்த காணொளி ஒன்று நடுநடுங்க வைத்துள்ளது. இந்த சிசிடிவி பதிவான வீடியோ காட்சியை காணும் போது, நிச்சயம் அந்த கட்டிடம் ஒரு தங்கும் விடுதியாக இருக்கலாம் என்பதை ஊர்ஜிதமாக கணிக்க முடிகிறது.

வீடியோவின் ஆரம்பத்தில் இருந்தே அந்த கோரிடார் யாரும் இல்லாமல் தான் இருந்தது. மக்களின் நடமாட்டம் என்று எதுவும் காணப்படவில்லை. வீடியோ ஓடிக்கொண்டிருக்கும் போது, இடையே வெளிப்புறத்தில் இருந்து ஹூட்ஸ் உடை அணிந்த ஆண் நபர் ஒருவர் அந்த கோரிடாரில் இயல்பாக நடந்து வருகிறார்.

அவர் ஓரிரு அறைகளை தாண்டி.. கோரிடாரின் நடு பகுதியை அடையும் போது தான், சிசிடிவி கேமாராவில் அந்த விசித்திர புகை போன்ற உருவம் தோன்றுகிறது.

திடீரென கோரிடாரின் பாதி வழியில் தோன்றிய அந்த கருப்பு நிற புகை போன்ற உருவம். ஒரு மனித உருவம் போல உருவாகிறது. அதை கண்ட அந்த ஆண், தடுமாறி கீழே விழுகிறார். அவர் கீழே விழுந்த சமயத்தில், காலை பிடித்து ஒருசில அடி தூரம் புகை மண்டலமாக தோன்றிய அந்த விசித்திர உருவம் இழுத்து செல்கிறது.