விமான கழிவறையிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை……

டெல்லியிலிருந்து புறப்பட்ட AirAsia விமானத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் சடலாமக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியைப் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து இம்பால் நோக்கி புறப்பட்டுச் சென்ற Air Asia விமானத்தின் கழிவறையில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முதற்கட்ட தகவலில் இருந்து குழந்தையின் விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. இந்நிலையில், மீட்கப்பட்ட குழந்தையின் வாயில் டிஸு காகிதம் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

குழந்தையின் தாய் இம்பால் விமான நிலையத்தில் இருந்து அதே விமானத்தில் பயணித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை சம்பவத்தின் போது குழந்தையின் சத்தம் வெளியே வராமல் இருக்க குழந்தையின் வாயில் காகிதத்தை வைத்து அடைத்திருப்பதாக தெரிகிறது.

கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் விமான காவல்துறை கண்கானிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையின் நிலை குறித்து மருத்துவ குழுவிற்கு அறிவிக்கப்பட்டது விபரம் அறிந்து வந்த மருத்துவர் குழு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் பெயர் பட்டியலைக் கொண்டு குழந்தையின் தாய் தகவல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் குழந்தையின் தாய் யார். குழந்தையின் மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.