பெற்ற மகளையே ஐந்து வருடங்களாக கற்பழித்த தந்தை! பின் மகள் எடுத்த அதிரடி முடிவு..

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வருடங்களாக பெற்ற மகளைபே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே வசித்து வருவபர் கூலி தொழிலாளி சுந்தரம். இவரது 3வது மகள் விமலா. கடந்த 2013ம் ஆண்டு வீட்டில் தனியாக் இருந்த மகளை காம வெறி பிடித்த சுந்தரம் ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சுந்தரம் இதே போன்று பலமுறை விமலாவை மிரட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தரம் விமலாவிடம் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் தந்தையின் ஆசைக்கு இணங்க மறுத்து விமலா பிளேடால் தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்து தந்தை அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதனையடுத்து விமலா அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெர்றார். பின் சோமங்கலம் காவல் துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சுந்தரத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.