மும்தாஜை பழிவாங்க அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றிய டேனியல்! குறுப்படம் வருமா?

நடிகர் டேனியல் இன்று பிக்பாஸ் வீட்டில் பொய் பேசி சிக்கியுள்ளார். ஆனால் நான் செய்யவே இல்லை என தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் கூறி ஏமாற்றியுள்ளார்.

இரவு 1 மணிக்கு மேல் மும்தாஜ் தனக்கு சுடுதண்ணீர் வேண்டும் என வந்த அடுப்பை பற்றவைக்க முயன்றார். ஆனால் டேனியல் கேஸ் நிறுத்திவிட்டு, அடுப்பு பற்றவைக்கமுடியாது என கூறி அவரை ஏமாற்றினார்.

காலையில் அனைவரும் இது பற்றி கேட்டதற்கு “நான் செய்யவே இல்லை” என கூறி ஏமாற்றினார்.

அதனால் இந்த வார இறுதியில் ஒரு குறும்படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.