கார சட்னி இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். கார சட்னி செய்வது மிகவும் எளிது. கார சட்னி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அத்தகு சுவையான கார சட்னி செய்வதற்கான செய்முறை குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் – 10 (அ) பெரிய வெங்காயம் – 1
- பூண்டு – 5
- தக்காளி – 2
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
- உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
செய்முறை
- சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம், பூண்டு ,தக்காளி, மிளகாய்த்தூள், தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை (10-15 நிமிடங்கள் ) நன்றாக வதக்கவும்.
- இப்பொழுது சுவையான கார சட்னி தயார்.
- கார சட்னி இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.