முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று பாதிப்பால் உடல்நலம் குன்றி கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கருணாநிதியை காண கோபாலபுரம் படையெடுத்து வந்து அவரை பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.
பிரதமர் மோடி கருணாநிதி பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் நலம் விசாரித்ததாகவும் அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் அவர் ட்விட்டில் போட்டுள்ளார்.அவருடைய மகன் மு.க.அழகிரிக்கு நேற்று இரவுக்கு மேல் வந்த தந்தை பற்றிய தகவலால் கலங்கிப் போயுள்ளார் என தெரிய வந்துள்ளது.ஆனால் என்ன தகவல் என உறுதி செய்யப்படவில்லை.
Spoke to Thiru @mkstalin and Kanimozhi Ji. Enquired about the health of Kalaignar Karunanidhi Ji and offered any assistance required. I pray for his quick recovery and good health. @kalaignar89
— Narendra Modi (@narendramodi) July 27, 2018
இதனால் மக்கள் பலர் கருணாநிதியை எண்ணி சோகத்தில் உள்ளனர்.மேலும் அவரை பற்றிய செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவராதது மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் ஜெயலலிதா இறந்த வழக்கில் பல மர்மங்கள் இன்னும் விலகாத நிலையில் தற்போது கருணாநிதி உடல்நலம் குன்றி இருப்பதாகவும் ஆனால் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படம் கூட வெளியிடாததால் மக்கள் கலகத்தில் உள்ளனர்.
மேலும் இன்று கலைஞர் திமுக தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் இன்று ஏதாவது சோக செய்தியை வெளியிட்டால் அது பெரும் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்பதால் தற்போது எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கிறார்களா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென்றால் கருணாநிதியின் குடும்பத்தார் உண்மையை ஆதாரத்துடன் வெளியிடுவதே நல்ல முடிவாகும்.