தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அனைவரும் சொல்வது நயன்தாரா தான். பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார் என செய்திகள் பல வந்தன.
ஆனால் இருவரும் அதை மறுக்கவில்லை. அதே வேளையில் அவர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வது, சந்தித்துக்கொள்வது என புகைப்படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.
விக்னேஷ் சிவன் தற்போது தன் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தன் அம்மாவுக்கு இன்று பிறந்தநாள் என கூறியுள்ளார்.