விசுவாசம் படம் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது. 2019 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்காக வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள்.
சிவா இயக்கி வரும் இப்படத்தின் மீது கூடுதலான எதிர்பார்ப்பு உள்ளதென்றே சொல்லலாம். நயன்தாரா இதில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதில் மேலும் ரோபோ சங்கர், யோகி பாபு என சில காமெடியன்கள் நடிக்கிறார்கள். அஜித்துக்கு தாய்மாமனாக தம்பி ராமையா நடித்துள்ளார். அண்மையில் இவர் பேட்டி கொடுத்துள்ளார்.
வீரம், வேதாளம் படத்தில் நான் அவருடன் இரண்டாம் பாதியில் நடித்திருந்தேன். ஆனால் இப்படத்தில் படம் முழுக்க அவருடன் இருப்பேன். இமான் இசையமைக்கும் இப்படத்தில் நான் பாடியிருக்கிறேன் என கூறியுள்ளார்.