80 வயதில் 20 வயது இளைஞனாக கம்பீரத் தோற்றத்துடன் மிரட்டும் தாத்தா..!!

81 முதியவர் ஒருவர் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் டோஷிசுகே கனஸாவா (வயது 81). இவர் தனது 34 வயது வரை ‘Body Builder’ ஆக இருந்து அதன் பிறகு ஓய்வு எடுத்துக்கொண்டார்.

அத்துடன் பல சாம்பியன் பட்டங்களையும், பதக்கங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவர் தனது 50 வது வயதில் தன்னுடைய தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் ‘Body Builder’ ஆக வேண்டும் என நினைத்து அதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டார்.

மது, புகைப்பிடித்தலை முற்றிலும் கைவிட்டார் கனஸாவா. பின்னர், இளைஞராக இருந்தபோது தினமும் 6 மணிநேரம் செய்த உடற்பயிற்சியை, 3 மணிநேரமாக குறைத்து மேற்கொள்ள ஆரம்பித்தார்.அவரது உடலில் மாற்றம் வர ஆரம்பித்தது. நோய்களும் காணாமல் போயின.

அதன் விளைவாக தனது 80 வது வயதில் உலக ‘Body Builder’ போட்டியில் கலந்து கொண்டு 6 ஆம் இடம் பிடித்தார். மேலும், வயதான போட்டியாளர் என்ற தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறும் போது , 85 வயது வரை என் உடல் ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை Body Builder ஆக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.