பிரித்தானிய இளவரசி மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு விதிமுறைகளா?

பிரித்தானிய அரச குடும்பத்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

மேகன் மெர்க்கல் கர்ப்பமானால் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பிறக்கும் வரை அறிந்துகொள்ளக்கூடாது.இளவரசி கேட் மிடில்டன் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்வரை, பிறக்கப்போகும் குழந்தை எந்த பாலினம் என்பது ரகசியம் காக்கப்பட்டு வந்தது.

அரச குடும்ப விதிகளின்படி கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிக குறைந்த அளவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்கள் பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் பயணங்கள் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.பொதுவாகவே அவர்களுக்கு ‘கர்ப்பகால விடுப்பு’ என்பது இல்லை. அவர்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன் அரச குடும்ப விதிகளின் படி ஒரு விருந்து வைக்க வேண்டும்.பாரம்பரியமாக அரச குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு வீட்டில்தான் பிரசவம் நடக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறை இளவரசி டயானாவை தொடர்ந்து இளவரசி ஆன்னீயாலும் உடைக்கப்பட்டது.

டயானா, இளவரசர் வில்லியம்சை பேடிங்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் பெற்றெடுத்தார். இந்த புதிய பழக்கத்தை தொடர்ந்து இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிசும் அதே மருத்துவமனையில்தான் பிறந்தார்கள்.

அந்த சமயங்களில் அங்கே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மெர்க்கல் கர்ப்பமானாலும் அதே எண்ணிக்கை இருக்கும்.அரச குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது முதலில் மகாராணிக்கே தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கு பிறகுதான் ஏனைய குடும்பத்து உறுப்பினர்களுக்கு கூறுவார்கள்.

அரச குடும்பத்தினர் பொதுவாகவே நான்கு எழுத்துக்களில் பெயர்களை கொண்டிருப்பார்கள். எனவே, மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொண்டால் நான்கு எழுத்துக்களில் தான் பெயர்களை வைக்க வேண்டும்.