சென்னையில் புகார் அளித்த ஸ்ரீ ரெட்டி! சிக்கியது யார் யார்?

சென்னையில் ஸ்ரீ ரெட்டி இன்று அளித்த பேட்டியில் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான் என்றார்.

வாராகி என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவர் என்னை விபச்சாரி என்று கூறினார். இதனால் இவர் பேரில் நான் புகார் அளித்துள்ளேன். அவருக்கு நான் யார் என்ன என்பதே தெரியாமல் என்னை இப்படி கூறுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றார்.

சென்னை வந்த ஸ்ரீ ரெட்டி சினிமா வாய்ப்பு கொடுப்பதாக பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் புகார் தெரிவித்துள்ளதாகவும், தனக்கான நீதி கிடைக்கும் என்ற நிலையில் சென்னை வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஷாலும், கார்த்தியும், தனது புகார் குறித்து முறையாக அணுகவில்லை. நான் பாதிக்கப்பட்டவள், எனக்கு எதிரான வாராகியின் புகார் மிகவும் கீழ்த்தரமானது எனவும் கூறியுள்ளார்.