பறந்து கொண்டிருந்த விமானத்தில் பிரசவித்த வீராங்கனை! சிக்கிய பின் நடந்தது என்ன?

டெல்லி வந்த விமானத்தின் கழிவறையில் குறை மாதத்தில் பிரசவித்த விளையாட்டு வீராங்கனையின் வாக்குமூலத்தால் பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இம்பாலில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன் தினம் வந்தது. அப்போது கழிவறைக்கு சென்ற ஊழியர் ஒருவர் குறை மாத கரு ஒன்று ரத்தகறையுடன் உயிரிழந்ததை கண்டு அதிர்ந்து போனார். இது குறித்து விமான மேலாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனால் விமானம் தரை இறங்கியதும் விமானப் பணியாளர்கள் யாரையும் கீழே இறங்கவிடவில்லை. பொலிசார் விமானப் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பிறகு 19 வயது விளையாட்டு வீராங்கனைதான் இந்தக் கருவை பிரசவித்தது தெரிய வந்தது. அவர் கொரியாவில் நடக்கும் போட்டிக்குச் செல்ல இருந்தவர். அப்போது அவர் ஓப்புக்கொண்டார். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து அவர் கூறுகையில் நான் கர்ப்பமானதே எனக்கு தெரியவில்லை. எங்கள் குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியாது என்றார். மேலும் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.