ஏ.டி.எம் மெஷினில் பணம் எடுக்கத் தெரியாமல் மற்றவர்களிடம் கார்டை மற்றவர்களிடம் கொடுத்து எடுத்தால் ஏற்படும் பின்விளைவுகளைக் காணொளியில் காணலாம்.
இரண்டு நபர்கள் கூட்டாளியாக உள்ளே வருகின்றனர். அதில் ஒருவர் மற்றவருக்கு உதவுவது போன்று கார்டை வாங்கி அவருக்கு பணம் எடுக்க உதவி செய்கிறார்.
மற்றொரு புறம் அதே கார்டை தனது நண்பரிடம் கொடுத்துவிட்டு கார்டை மற்றொரு மெஷினில் போட்டுவிட்டு வாங்கிவிட்டு அக்கார்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டார்.
உரிமையாளர் வெளியே சென்றதும் அவருக்கு உதவிய நபர் தனது நண்பர் நிற்கும் ஏ.டி.எம் மெஷினிற்குச் சென்று அவரது ரகசிய எண்களை கொடுத்து பணத்தை அபேஸ் செய்யும் காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் திருக்கோவிலூர் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-யில் அரங்கேறியுள்ளது.