மரணத்தின் விளிம்பில் இருக்கும் எதிரியையும் மன்னித்து வாழ்த்தும் பண்பினன் தமிழன்!
அதனாலோ என்னவோ எம் இனத்தை அழித்தவர்களுக்கும் வலியில் துடிக்கையில் அறம் பாட முடியவில்லை.
இன்று 94 வது அகவையில் சிறுநீர் வழி தொற்று நோயால் அவதிப்படுகின்ற கலைஞர் பாவம் குணமாகட்டும் என்றே மனம் நினைக்கின்றது.
ஏனெனில் புலிகளின் தலைவர் தாய் என்றில்லாவிட்டாலும் ஒரு 65 அகவை கொண்ட எதுவுமே அறியாத அப்பாவி மூதாட்டி அன்னை பார்வதி அம்மாவுக்கு இதே சிறுநீர் வழி தொற்று சிக்கல் வந்த பொழுது அவருக்கு சிகிச்சை கொடுக்க மறுத்த கொடுமையை கலைஞர் நெஞ்சு உருகி குற்ற உணர்வில் உணரவேனும் அவர் குணமாகட்டும்.!!
அன்று புலிகளின் தலைவனை ஈன்றெடுத்த தாய் பார்வதி அம்மா சிங்கப்பூரில் சிகிச்சை பெற முடியாது என்ற நிலையில் அன்னை தமிழகத்தை நாடி வந்த பொழுது .
சென்னையில் சிகிச்சை வழங்க மறுத்த இரக்கமற்ற கொடுமையை கலைஞர் இன்று சிந்திப்பாரா?
என்ன பாவம் செய்தார் என்று அன்று அவருக்கு அந்த தண்டனையை அவர் வழங்கினார்?
வந்தேறு குடியை எல்லாம் வாழ வைத்தும் ஆள வைத்தும் பார்க்கும் அன்னை தமிழக மண்ணில் எங்கள் தமிழன்னை விமானத்தால் வந்திறங்க கூட விடவில்லையே? அடக்கி வைத்த சிறுநீரை கூட கழிக்க விடாமல் திருப்பி அனுப்பினார் கலைஞர்.
ஆனாலும் கலைஞரே நாங்கள் உங்களை போல் திராவிடர் அல்லர். தமிழர்கள்!
அதனால் எம்மால் உங்களுக்கு உயிர் பிரியும் வலியில் நீங்கள் துடிக்கையில் அறம் பாட முடியவில்லை!
நீங்கள் குணமாகி நலம் பெற்று வீடு திரும்பி சிந்திக்கும் திறன் கொண்டு வாழ வேண்டும்!
ஏனெனில் மரணத்தின் முன்பு ஒரு பொழுதேனும் நீங்கள் ஈழ தமிழினத்திற்கு செய்த கொடும் பாவங்களை எண்ணி விழி சிந்த வேண்டும்!
மேற் குறிப்பிட்டவை ஒரு ஈழத் தமிழனின் வலியின் வரிகள்…