2 வயது சிறுவனை கவுரவித்த ஐசிசி – வீடியோ

பங்களாதேஷ்த்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சிறுவனின் தந்தை பந்தை வீச, அதை அந்த சிறுவன் அழகாக ஆப்-சைடில் அடுத்து விளையாடுகிறார். இதைப்பார்த்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறுவனை பாராட்டி உள்ளது. மேலும் அவருக்கு விருது அறிவித்து கவுரவித்துள்ளது.

இதைக்குறித்து ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

இந்த சிறுவனுக்கு இரண்டு வயது தான். ஆனால் இவனது ஆப்-சைடு டெக்னிக் முற்றிலும் அழகாக உள்ளது. நீ தான் ஐசிசியின் “ஃபேன் ஆஃப் தி வீக்” என்று கவுரவித்துள்ளது. இன்னும் கொஞ்சம் உன் தந்தையிடம் கற்றுக்கொள். ஒரு நாள்  வங்கதேச அணிக்காக விளையாடுவாய் என கூறியுள்ளது.