இன்றைய ராசிபலன் (29/07/2018)

  • மேஷம்

    மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மாலை மணி 5.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார். மாலை மணி 5.30 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி களில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர் கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர் சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தின ருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் அமைதி நிலவும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத் தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

  • மகரம்

    மகரம்: மாலை மணி 5.30 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். மாலை மணி 5.30 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சபைகளில் மதிக்கப் படுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமு கமாவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்