பாம்புடன் உறவு கொண்டு குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணினால் நைஜீரியாவில் பெரும் பரபரப்பு…..!!

கனவில் பாம்பு வந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

இப்படி பாம்பு கனவில் வருவது குறித்து விளக்கங்கள் கூறப்படுகின்ற நிலையில், தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக் ஒரு தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார்.அதாவது, அவரது கனவில் பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கனவு மூலமே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடெகோக் கூறினார். அந்த குழந்தைக்கு கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பது போல் கூர்மையான இரு பற்கள் இருந்தது. ஆனால் அந்தக் குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.

விசித்திரங்களுக்கு பஞ்சமில்லாத இந்த உலகில், இதனை ஒரு நம்பமுடியாத விசித்திர சம்பவமாகவே பார்க்க முடிகின்றது.