எனக்கு துப்பாக்கி வழங்குவது நாட்டிற்கு அச்சுறுத்தல் என பிரதமர் கூறினார் : சிவாஜி!!

வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி வைத்திருப்பதாக அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்றைய வடமாகாண சபை அமர்வின் போது கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இதன்போது சபையில் பேசிய வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், “அனந்தி கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பித்திருந்து அதனை பெற்றிருந்தால் கூட அதில் தவறில்லை.

ஆனால் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சருடைய அனுமதி பத்திரத்தை காண்பிக்க வேண்டும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது உயிர் அச்சுறுத்தலினால் துப்பாக்கிக்கு விண்ணப்பித்தேன் எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிஸ்டல் வழங்கப்பட்டது.

அதை சுட்டிக்காட்டி சொன்னபோது மறைந்த முன்னாள் பிரதமர் ரண்டசிறி விக்ரமநாயக்க, உமக்கு ஆயுதம் வழங்குவது இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்றார் என தெரிவித்திருந்தார்.