மஞ்சள்களிலே கஸ்தூரி மஞ்சள் குணங்கள் நிறைந்தது. இதில் மூலிகைகளோ இதர சேர்மானங்களோ கிடையாது. நூறு சதவீதம் கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, ஆறாத புண்கள், அழகுக்கு அழகை சேர்க்கும் இவற்றை பற்ற சில காண்போம்.
1. வயிற்றுப்போக்கிற்கு வெந்நீரில் ஒரு ஸ்பூன் அளவு கஸ்தூரி பவுடர் மற்றும் சிறிதளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
2. பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், உப்பு, அரை ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்தால் வயிற்றுவலி உடனே குறையும்.
3. ஆறாத புண், வெட்டுக்காயம், தீப்புண் போன்றவைகளுக்கு சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் பவுடரினை தேங்காய் எண்ணெயில் குழப்பி காயம் பட்ட இடத்தில் சுத்தம் செய்து அதன் மீது தடவினால் ஆறாத புண்கள் எளிதில் ஆறும்.
4. தினம் பூசி வர முகம் அழகு பெறும். தோலின் மென்மையை பாதுகாத்து உடலில் மணம் கமழச் செய்யும். கலர் படியாது. முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகள், பருக்கள் மறையும், முகம் பொன்னிறமாக அழகுடன் காட்சியளிக்கும்.
5. கஸ்தூரி மஞ்சளை முதன் முதலாக உபயோகிக்கும் பொழுது முகத்தில் சற்று எரிச்சல் ஏற்படலாம். இவை நல்லது தான். தோலில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் தூசிகளினால் ஏற்படும் கிருமிகள் அழிவதாகும்.