பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே 4 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்ட நிலையில் இந்த வாரம் மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா, பாலாஜி,வைஷ்னவி ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர்.
இந்த நாமினேஷனில் நடிகை ஐஸ்வர்யாவும் இருந்தார். கடந்த வாரம் அவருக்கு கிடைத்த சிறப்பு சக்தியால் அவர் நாமினேஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். மீதமுள்ள 5 நபர்களில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் நடிகர் மஹத் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த வாரம் முழுக்க நடந்த வாக்கெடுப்பில் நடிகர் மஹத்திற்கும், வைஷ்ணவிக்கும் இடையே தான் நெருங்கிய வாக்கு வித்யாசம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றுடன் வாக்ககுப்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில் வைஷ்ணவியை விட மஹத் கம்மியான வாக்குகள் பெற்று இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றபட்ட நபராக அறிவிக்கப்ட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஊர்ஜிதம் செய்ய நாளை (ஜூலை 29)ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக காத்திருப்போம்.