வவுணதீவு பிதேச செயலகப் பிரிவில் உள்ள பன்குடாவெளி கிராமத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதரவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் இந்த நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில், ஐந்து குடும்பங்களுக்கு இவ்வாறு பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர், சமூக ஆர்வலர்கள், கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.