பெண்கள் கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான்.இதற்கு டீன் ஏஜ்… மிடில் ஏஜ்… ஓல்டு ஏஜ்… என்று எந்த வயதும் விதிவிலக்கல்ல! டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசு புசுவென காடுபோல் முடி வளர்வது இயற்கையே.
ஆனால், அழகாக இல்லையே’ என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் – குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.
அதுமட்டுமல்ல.. ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் புருவங்களில் இருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுத்தும்.
புருவத்தில் முடி குறைவாகவும் மெல்லியதாகவும் இருந்தால், விளக்கெண்ணை வைத்து தினமும் இரண்டு வேளை நன்றாக புருவத்தை நீவி விடவும். இதன் மூலம் பலவீனமான புருவம் பலமான / அடர்த்தியான புருவமாக மாறிவிடும். அதன் பின் சீராக்கி வடிவமைத்தால், கண்களின் அழகையும் முக அழகையும் அது அதிகரிக்கும்.
இரவில், புருவத்தின் மேல் கோல்டு கிரீம் தடவிக் கொண்டு படுக்கவும். இது ஏ.சி. அறையில் இருப்பதால் ஏற்படும் வறட்சியைப்போக்கும். எந்த ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே…! என்பவர்களுக்கு …