பாவங்களை குறைக்க இதை செய்யுங்கள்…

நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் நாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக சிலவற்றை பின்பற்ற வேண்டும்.

பாவங்களை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

மூன்று என்பது பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனைக் குறிக்கிறது, அதனால் ஏழைகளுக்கு 3 கைப்பிடி அளவு அரிசியை தானமாக வழங்க வேண்டும்.

பறவை என்பது பறப்பது மற்றும் சுதந்திரத்தைக் குறிக்கிறது, எனவே கூண்டில் அடைக்கப்பட்ட 2 பறவைகளை பறக்க விட வேண்டும்.

நீங்கள் யாருக்கு தீங்கு செய்ததாக நினைத்து வருந்துகிறீர்களோ, அவர்களுக்கு துளசி செடியை பரிசாக கொடுக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கைத் துணையை மனம் வருந்த செய்ததாக நினைத்தால், திருமணமான மூன்று பெண்களுக்கு சிவப்பு நிற வளையல்களை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும்.

நீங்கள் செய்த தீய செயலுக்கான தாக்கத்தைக் குறைக்க, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழை குழந்தைக்கு தேன் வாங்கி கொடுக்க வேண்டும்.

உங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்கு வருந்தினால், 5 தானியங்களை உங்கள் பெற்றோருக்கு கொடுத்து, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பரிசுக்களை கொடுக்க வேண்டும்.

உங்கள் தெருவில் உள்ள நாய்களுக்கு 5 நாட்கள் குடிப்பதற்கு பால் கொடுத்தால், அது கண்களுக்கு தெரியாத அச்சத்தையும், கவலையையும் நீக்கும்.