யாழ்ப்பாணத்தில் யார் அந்தக் குள்ளர்கள்?

யாழ்.அராலி பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் குடிமனைகளுக்குள் நடமாடும் மர்ம நபர்களால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று அராலிப் பகுதி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எங்களிடம் பேசினர்.

இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேசசபைத் தலைவர் த.நடனேந்திரன் கூறுகையில்,

”அராலிப் பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள். கறுப்பு நிறத்தில் உடைகளை அணிந்திருப்பதுடன் முகத்திற்கும் கறுப்பு நிறச் சாயம் பூசியிருக்கின்றார்கள்.

இவர்கள் மக்களைத் தாக்குவதில்லை. கள வு எடுப்பதில்லை. ஆனால் மக்களுடைய வீடுகள் மீது கல் வீசுவதுடன், மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேரில் வந்து பார்வையிட்டிருந்தார். எனினும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறையவில்லை. எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

அராலி மக்கள் கூறுகையில்,

இரவு 7 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் இவ்வாறான மர்ம நபர்களுடைய நடமாட்டம் நடக்கிறது. வாகனச் சத்தம் கேட்கிறது. அதன் பின் கறுப்பு உடையணிந்து முகத்திற்கு கறுப்பு சாயம் பூசியவர்கள் நடமாடுகிறார்கள்.

மக்கள் துரத்திச் சென்றால் மதில் மற்றும் வேலியை ஒரே தடவையில் பாய்கிறார்கள். அவர்கள் குள்ளமானவர்களாக இருக்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் தூங்காமல் விழித்திருக்கவேண்டியுள்ளது.

இரவு நேரங்களில் விழித்திருப்பதனால் பகலில் வேலைக்கு செல்ல இயலாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம். குள்ள மனிதர்களைப் பிடிப்பதற்கு நாங்கள் வீதியில் நின்றால் உடனேயே பொலிஸார் சம்பவ இ டத்திற்கு வருகிறார்கள்.

வந்தவர்கள் எங்களை வீதியில் நிற்கவேண்டாம் என அச்சுறுத்துகிறார்கள். இந்த மர்ம நபர்களுடைய நடமாட்டத்தினால் நாம் அச்சத்துடன் வாழ்கிறோம். பொறுப்பு வாய்ந்தவர்கள் இது தொடர்பாக உடனடி யாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறுகின்றனர்.

இதேவேளை யாழின் பல பாகங்களிலும் கொள்ளைச் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுடன் இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டமானது மக்களிடையே பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.