31ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ள விடயம்…!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கும், மாதிரி வினாத்தாள்களை விநியோகம் செய்வதற்கும் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான மூன்று மணித்தியால வினாத்தாள்களுக்கு வாசிப்பு நேரமாக 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 5ஆம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மற்றும் மாதிரி வினாத்தாள்களை விநியோகம் செய்வதற்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாகவும் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.