சிறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி -வீடியோ

பணம் பாதளம் வரைக்கும் பாயும், பணம் இருந்தால் எதுவும் நடக்கும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலை குற்றத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஒரு ரவுடி, தனது பிறந்தநாளை அன்று சிறையில் கேக் வெட்டி, சக கைதிகளுக்கு கொடுத்து கொண்டாடி உள்ளார். அதற்காக ஒரு பெரிய தொகையை சிறைச்சாலை அதிகாரிக்கு கொடுக்க வேண்டியிருந்தது. ரவுடி சிறையில் கேக் வெட்டி கொண்டாடியதை வீடியோ எடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பாக்தாத் சிறையில் கைதி முன்னா பஜ்ரங்கி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. உத்தர பிரதேசத்தை பொருத்த வரை இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. தற்போது சிறையில் ரவுடி கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், ரவுடி ஷிவேந்திர சிங், அவரது புகைப்படம் பொருந்திய கேக்கை கத்தியால் வெட்டினார். கேக் வெட்டுவதற்கு முன், மெழுகுவர்த்தியை பிரகாசிக்கச் செய்தார், பின்னர் வெட்ய கேக்கை சக கைதிகளுக்கு கொடுக்கிறார். இது வீடியோவாக எடுக்கப்படுகிறது. சிறையில் பாதுகாப்பற்ற எந்த ஒரு பொருளும் கொண்டு செல்ல தடை விதிக்கப்ட்டு உள்ளது. பின்னர் எப்படி சிறையில் தொலைபேசி, கத்தி, மெழுகுவர்த்தி சென்றது என்பதற்க்கான விடை சிறை அதிகாரிகளுக்கே தெரியும்.

இந்த சம்பவம் ஜூலை 23 அன்று நடைபெற்றுள்ளது. ஷிவேந்திரா தன் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் சென்ற போது, இதுகுறித்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது ​​ஜெய்லானி வினய் குமார் தனது பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்ததாகவும், அதற்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிறை அதிகாரிகள் தான் கேக், மெழுகுவர்த்தி, கத்தி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றுக்காக ஏற்பாடுகள் செய்தார்கள் என ஷிவேந்திர நிருபர்களிடம் கூறினார்,