கருணாநிதி மீண்டு வருவாரா?

கருணாநிதியின் ஜாதக அமைப்பு குறித்தும், அதனால் அவர் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பிரபல ஜோதிடர் சுப்ரமணியம் கணித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் ஜாதக அமைப்பு குறித்து பிரபல ஜோதிடர் சுப்ரமணியம் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், கருணாநிதியின் லக்னம் கடன லக்னம் ஆகும். லக்னாதிபதி சந்திரன் லாபஸ்தானத்திலே 11வது இடத்தில் உச்சம் பெற்றுள்ளார்.

சந்திரனோடு இரண்டாம் இடத்தின் அதிபதி சூரியனும் உச்சம் பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் அவர் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மையை இயற்கையிலேயே பெற்றிருப்பார்.

கருணாநிதிக்கு மூன்று கிரகங்கள் உச்சமாக உள்ளது.

இவ்வளவு சிறப்பை பெற்ற கருணாநிதி இன்று உயிருக்கு போராடி வருகிறார், இந்த காலக்கட்டத்தில் அவருக்கு சுக்கிர திசை. மேலும் குரு கேட்டை நட்சத்திரத்தில் இயங்குகிறார்.

மேலும் புதன் கடக லக்னத்துக்கு பாதக அதிபதியாகும். இதனால் அவர் உயிர் சோதனைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த சோதனையை வெற்றி பெற்று அவர் நல்ல நிலைக்கு வருவார் என எதிர்பார்த்தால் அது வேதனையளிக்கும் விதத்தில் இருக்கலாம்.

இது கருணாநிதிக்கு சோதனை காலம் தான் என கூறியுள்ளார்.