ஜீங்கா- திரைவிமர்சனம்

ஜீங்கா என்கிற டான் பரிஸ் வரைக்கும் போய் தன்னுடைய பூர்வீக சொத்தை எப்படி மீட்கிறார் என்பது தான் கதை.

படத்தின் இயக்குனர் கோகுல்

இசையமைத்திருக்கிறார் சித்தார்

படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

மேலும் மடோனா செபஸ்டீன் சாயிசா சரண்யா பொன்வண்ணன் யோகிபாபு உள்ளிட்ட மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

யோகி பாபு படம் முழுக்க விஜய் சேதுபதியோடு இணைந்தே பயணிக்கிறார். இருந்தும் அவருடைய காமெடி பேசப்படுகிற அளவுக்கு இல்லை.விட்டு விட்டு அரங்கத்தில் சிரிப்பொலி கேட்க வைக்கிற படமாகத்தான் அமைந்திருக்கிறது ஜீங்கா.

விஜய் சேதுபதி மற்றும் சரண்யா பொன் வண்ணன் இருவரும் அம்மா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் பகுதி ரசிக்கும் படியாகவும் இரண்டாம் பகுதிக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும் இரண்டாம் பகுதி அந்த எதிரபார்ப்பை பூர்த்தி செய்திருக்கவில்லை.

படத்தில் நடிகை செரினாவின் நடிப்பு மற்றும் நடனம் பெரும் வரவேற்புக்குறியது.

படத்தின் இசை இன்னமும் மெருகேற்றியிருக்கலாம் என தோன்றவைக்கிறது.

இந்த படத்தோட மிகப்பெரிய பலம் மற்றும் ப்ளஸ் கண்டிப்பாக விஜய் சேதுபதி தான்.

படம் பார்த்த வரைக்கும் எல்லாருடைய கருத்தும் படத்தினுடைய பட்ஜட் அதிகம் என்பது தான்.

மொத்தத்தில் ஜீங்கா எதிர்பார்த்த பிரம்மாண்டத்தை வழங்கவில்லை என்றாலும் இளைஞர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பிற்குறிய படமாகத்தான் இருக்கிறது.