கள்ளக்காதலுடன் தனிமையில் இருந்த மனைவி… கணவர் எடுத்த அதிரடி முடிவால் மனைவி தற்கொலை

முறையற்ற உறவை கணவன் அறிந்து கொண்டதால், திருப்பூரில் எட்டு மாதக் கைக்குழந்தையின் தாய் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் போயம்பாளையத்தில் பனியன் ஆலை தொழிலாளியாக இருக்கும் அசோக் குமார் என்பவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், கவிதாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் பாண்டியராஜன் என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கவிதாவை பார்க்க பாண்டியராஜன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தற்செயலாக அங்கு சென்ற அசோக் குமார், மனைவியின் முறையற்ற உறவை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இருவரையும் பொலிசில் ஒப்படைக்க முயற்சித்த போது கவிதா வீட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பாண்டியராஜனை பிடித்து அனுப்பர்பாளையம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.