இன்றைய ராசிபலன் (31/07/2018)

  • மேஷம்

    மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மூத்த அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

  • கடகம்

    கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர்கள், மற்றவர்களைப் பற்றிய வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரி களால் அலைகழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். நன்மை கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில்  பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் விமர்சனங்
    களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலா
    கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதியான நாள்.

  • கும்பம்

    கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துப் போகும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.