காமெடி நடிகர் யோகி பாபுக்கு திருமணம் – பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் யோகி பாபு. இவர் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படத்தில் இடம் பெற்றிருந்த கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

yogi babu

இந்நிலையில் தற்போது உண்மையாகவே யோகி பாபுவுக்கு கல்யாண வயசு வந்து விட்டது. யோகி பாபு சமீபத்தில் கலகலப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் திருமணம் எப்போது? யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த யோகி பாபு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் வீட்டில் பெண் பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் என கூறியுள்ளார்.