தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வட சென்னை படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ள நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வட சென்னை படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியிடப்பட்ட வட சென்னை படத்தின் டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வட சென்னை.
இந்த நிலையில், தனுஷ் நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும், இந்த டீசர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டீசரில் வரும் முத்தக்காட்சி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
தனுஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு முத்தம் கொடுப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில், ஒருவரையொருவர் கட்டியணைத்து உதட்டில் முத்தம் கொடுப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டீசரில், வன்முறை சம்பவங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தில் ஒரு சாதாரணம் புகைப்பிடிக்கும் போஸ்டர் இடம் பெற்றிருப்பது குற்றம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அதோடு, சினிமா என்பது சமூகத்திற்கு பயனுள்ள தகவல்களை மட்டும் தர வேண்டுமே தவிர, சமூகத்தை சீர்குழைக்கும் வகையில் அமையக்கூடாது என்பது பலரது கருத்தாக இருந்தது. சினிமாவை பார்த்து பலரும் கெட்டுப்போகிறார்கள் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.