ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மோசமான செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக சென்ற இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
நீதிமன்ற கட்டட லிப்டில் அவர் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் செயற்பாடு குறித்து உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு சென்ற சட்டத்தரணிகள் அச்சம் அடைந்துள்ளனர். லிப்டில் செல்ல அச்சமடைந்த நிலையில் மாடிப்படி வழியாக சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னுடன் வந்த மேலும் இருவருடன் லிப்டில் நுழைந்து 5 வது மாடிக்கு பயணிக்கும் சந்தர்ப்பத்தில் ரஞ்சன் ராமநாயக்க வேகமாக லிப்ட் சுவர் மீது தாக்கியுள்ளார்.
வழக்கு நிறைவடைந்து மீண்டும் 2வது மாடிக்கு செல்லும் முன்னர் நடந்து கொண்டதனை விடவும் மோசமாக செயற்பட்டுள்ளார். அங்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வேகமாக லிப்ட் சுவரில் தாக்குதல் மேற்கொண்ட ரஞ்சன் கத்தி கூச்சலிட்டுள்ளார். எனினும் லிப்ட்டில் இருந்து வெளியே செல்லும் போது மிகவும் அமைதியாக அவர் சென்றுள்ளார்.