யாழ் பலாலி வீதி கோண்டாவில் டிப்போவிற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பொருட்களை ஏற்றி வந்த சிறிய வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
யாழ் நகரிலிருந்து பலாலிப் பக்கமாக பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக பாரவூர்தியே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால், பாரவூர்தியில் கொண்டு வந்த பொருட்கள் பலவும் வீதியில் சிதறுண்டன.இதில் பயணித்த எவரும் தெய்வாதீனுமாக காயங்கள் எதுவுமின்றி தப்பிக் கொண்டனர்.
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான வாகன விபத்துக்கள் வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.