ராகவா லாரன்ஸுக்காக ஸ்பெஷலாக வீடியோ வெளியிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி

ஹைதராபாத்: ராகவா லாரன்ஸுக்காக என்று கூறி வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

பட வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார்.

அவரின் புகாரை மறுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஸ்ரீ ரெட்டி இவ்வளவு பேசியும் அவர் மீது கோபம் வரவில்லை, மாறாக அவரை பார்த்தால் பாவமாக உள்ளது என்றார் ராகவா லாரன்ஸ்.

மேலும் மீடியாக்கள் முன்பு ஆடிஷன் நடத்தி அதில் ஸ்ரீ ரெட்டி சிறப்பாக நடித்தால் உடனே தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறினார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் கூறியதையடுத்து ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இது லாரன்ஸ் மாஸ்டருக்கு என்று தெரிவித்துள்ளார்.

லாரன்ஸ் நடிக்கச் சொன்னால் அந்த வீடியோவில் அவர் தனது இடுப்பை தான் காட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டுத் தள்ளிவிட்டனர்.

அவர் உங்களின் திறமையை காட்டச் சொன்னாரே தவிர உடம்பை அல்ல…வீடியோ துவங்கியதும் நீங்கள் டான்ஸ் ஆடப் போகிறீர்கள் என்று நினைத்தால் சும்மா உடம்பை காட்டுகிறீர்கள் என்று ஒருவர் ஸ்ரீ ரெட்டியை விளாசியுள்ளார்.

என்ன ஒரு பாய்ச்சல்.. பெண்களே உங்களால் முடியுமா??