தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத சக்திவாய்ந்த இரு கட்சிகளாக திகழ்வது அதிமுக மற்றும் திமுக கட்சிகள்.
அதிமுக திமுக என்றாலே எதிரெதிர் முனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஜெயலலிதா அன்று கருணாநிதி குறித்து பேசிய வார்த்தை தற்போது வைரலாகியுள்ளது.
ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி: கருணாநிதி காலத்திற்கு பிறகான உங்கள் அரசியல் பற்றி?
அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவேன் என சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார் ஜெயலலிதா.
ஏன்? என்ற கேள்விக்கு, அவரை எதிர்த்து அரசியல் செய்யவே, நான் விரும்பாத இந்த அரசியலுக்கு வந்தேன். அவர் காலத்துக்கு பிறகு யாரை தகுதியான எதிரியாக நினைத்து அரசியல் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த பதில், திமுக மற்றும் அதிமுக தொண்டர்களை நெகிழ வைத்துள்ளது.