கொழும்பில் சிறப்பிக்கப்பட்ட ராகு கால துர்க்கை பூஜை…

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் மிக முக்கியமான ஒன்றாக துர்க்கை பூஜை காணப்படுகிறது.

அதிலும் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதி சிறப்பு வாய்ந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் ராகு கால துர்க்கை பூஜை கொழும்பில் உள்ள பல ஆலயங்களிலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பூஜையில், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.