உலகில் ஏன் இந்தளவு வெப்பம் தெரியுமா?

பெருமளவு வெப்பம் உலகளாவிய ரீதியில் பல நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாகியுள்ளது.

காட்டுத் தீ அபாயம் பல வார வெப்பநிலை காரணமாக அதிகரித்துள்ளது. உலர் நிலைமைகள் கிரீஸில் மட்டும் 80 பேரின் இறப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் கலிபோர்னியாவின் பல பகுதிகளையும் அழித்துள்ளது.

சில அறிக்கைகள் காட்டுத் தீயானது மனிதர்கள் வேண்டுமென்றே தீவைத்ததால் கூட உருவாகியிருக்கலாம் என்கிறது. விளைவாக நிலங்கள் மற்றும் மரங்கள் இழப்பினால் கடுமளவு வெப்பம் உருவாகியிருக்கலாம்.

யப்பானில் வெப்பநிலை 105.9 டிகிறி செல்ஸியஸிற்கு அதிகரித்ததால் மக்கள் சிலர் இறந்துள்ளனர்.

இவ் உஷ்ணநிலை இடத்திற்கிடம் வெவ்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது.

வட ஜரோப்பாவில் இது வழக்கத்துக்கு மாறாக அப்பகுதியில் ஏற்படும் உயர் அமுக்கம் காரணமாக நிகழ்கிறது.

எனினும் பொதுவாக காலநிலை மாற்றங்களும் வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணம் என்ற ஆழ்ந்த கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.