பேஸ்புக் நிறுவனம் 2 மணி நேரங்களில் 150 பில்லியன் டாலரை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமையன்று மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. 2 மணி நேரத்தில் அந்நிறுவனத்துக்கு 150 பில்லியன் டாலர் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பு, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பைவிட அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
இதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 15.8 பில்லியன் குறைந்துள்ளது. இதனால் அவரது சொந்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்குக் கீழே சென்றுவிட்டது.
அண்மையில் பேஸ்புக் தனது புதிய பயனாளர்கள் எண்ணிக்கையின் உயர்வு மிகவும் மந்தமடைந்துவிட்டதாக அறிவித்தது. இதன் எதிரொலியாகவே அந்நிறுவனத்துக்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.இது இலங்கையின் பொருளாதாரத்தையும் விட அதிகம்.
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ் புக் என்றமுகப்புத்தக நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.
உலக பங்குச் சந்தைகளில் இன்று பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள்பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. இதற்கமைய பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள் 20வீத சரிவை சந்தித்திருக்கின்றது. இது பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகளின் சந்தைப் பெறுமதியில் 150 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருப்பதாக பங்குச் சந்தை புள்ளிவிபரங்கள்தெரிவிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சரிவு சிறிலங்காவின் ஒட்டுமொத்தபொருளாதாரத்தையும் விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய 2017 ஆம்ஆண்டில் அதன் மொத்த தேசிய உற்பத்தி 87 தசம் 17 பில்லியன் டொலராக பதிவாகியிருந்தது.
பிழையான செய்திகளை பரப்பியமை மற்றும் வாடிக்கையாளர்களின்தரவுகளை வெளியாருக்கு விற்றமை தொடர்பிலான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை அடுத்தே பேஸ்புக்நிறுவனத்திற்கு இந்த அளவிற்கு பெரும் பின்னடைவிற்கு முகம்கொடுத்திருப்பதாக முன்னணிபொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பேஸ் புக் நிறுவனம் தனது நற்பெயரை அதிகரிப்பதற்காக சுயவிளம்பரத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை மேலும் 50 வீதத்தால் அதிகரிக்கத்தீர்மானித்துள்ளதாகவம் அறிவித்துள்ளது.அதேவேளை பேஸ்புக் நிறுவனம் சடட் சிக்கல்களுக்கு முகம்கொடுக்கநேரிட்டுள்ள தரவுத் திரட்டு மற்றும் வாடிக்கையாளர்களின் தரவுகள் வெளியிடங்களுக்குசெல்வதை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மும்படுத்துவதற்கான செலவீணங்களையும்,விளம்பரதாரர்களை கண்காணிக்கவும் மேலதிகமாக நிதி ஒதுக்கியிருக்கின்றது.
இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் முதலீடுபவர்களின் லாபத்தின்அளவு வீழ்ச்சியடையும் என்று எச்சரிக்கப்பட்டமையும் பேஸ்புக் நிறுவனத்தின்பங்குகளின் திடீர் சரிவுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஸ்டகிறாம், வட்ஸ்எப், ஆகியநிறுவனங்களினதும் உரிமத்தை தன்னத்தே கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் சமூக வலைத்தளசந்தையில் 30 வீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டுவிட்டரினதும் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.