கண்களை பாதுகாக்க தினமும் இதை செய்தால் போதும்

கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகை காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள் தான் முகத்திற்கு அழகும் கூட  ஆனால் இந்த கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டு போகின்றன.

இரவு அதிக நேரம் கண்விழித்து இருப்பது, அதிக நேரம் டிவி, லேப்டாப் போன்றவற்றை காண்பது போன்றவை கண்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்க கூடியவையாகும்.

நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் கண்களை சுற்றி கருவளையங்கள் உண்டாகின்றன. தொடர்ந்து டிவி, செல்போன், கணினி போன்றவற்றை பார்த்துக் கொண்டே இருப்பது, உங்களது கண்களை வறட்சியடைய செய்து, கண்களில் எரிச்சல் உண்டாக காரணமாக உள்ளன.

பார்வையை மேம்படுத்த மலைவாழையை இப்படி பயன்படுத்தலாம்.

மலைவாழை ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். தினம் இவற்றை செய்து வாருங்கள் நல்ல பலனை பெறமுடியும்.