கர்ப்பிணி பெண் உடற்பயிற்சியில் ஈடுபடும் காணொளி ஒன்று இணையங்களில் தீயாய் பரவி வருகின்றது. சாதாரண பெண்களால் கூட இது போன்று செய்ய முடியாத நிலையில் ஒரு கற்ப்பிணி பெண் இவ்வாறு செய்வது மிகவும் ஆச்சர்யம் தான்.
இளம் பெண்கள் இந்த காணொளியை பார்த்து அதிர்ச்சியடைவதாக கூறியுள்ளனர்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலம் என்பது மிகவும் முக்கியமான காலமாகும்.
ஒரு குழந்தை இல்லாமல் எந்த ஒரு பெண்ணும் முழுமை அடைவது கிடையாது. அப்படி ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்குள் அவள் படும் பாடு இருக்கே, அது சொல்லி தீராது.
கர்ப்பமாவதில் இருந்து தன் குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள் படும் அவதி சாதாரணமானது அல்ல. சும்மாவா சொன்னார்கள் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு பிரசவமும் மறு ஜென்மம் என்று.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு, கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருப்பதற்கு, பிரசவம் சுலபமாகவும், வேகமாகவும் நடப்பதற்கு, பெண்கள் ஆரோக்கியமானதை உட்கொண்டு உடலுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.
கண்டிப்பாக கர்ப்ப காலத்தின் போது பெண்களிடம் கோபமான குறைகள் வந்த வண்ணம் இருக்கும். அதனை தடுப்பதற்கும், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், சுலபமான பிரசவத்திற்கும் என இன்னும் பல நன்மைகளுக்காக நீங்கள் செய்ய வேண்டியது உடற்பயிற்சியில் ஈடுபடுவது.
உடற்பயிற்சி என்பது அனைவரும் செய்ய வேண்டிய ஒன்றே. கர்ப்பிணி பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்காக தனிப்பட்ட உடற்பயிற்சிகள் இருக்கிறது. அதனை செய்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பலவித நன்மைகள் கிட்டும்.