ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலனை கட்டிலோடு எரித்துக்கொன்ற காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரகாஷம் மாவட்டத்தை சேர்ந்த சேக் சபீர், ஹசீனா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனதையடுத்து, இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டனர்.
இருப்பினும், திருமணத்திற்கு பிறகும் தங்கள் கணவன் – மனைவியருக்கு தெரியாமல் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
காவலராக பணிபுரியும் சேக், கோழிப்பண்ணை ஒன்றையும் நடத்தி வருகிறார். இங்கு இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். இந்நிலையில், கோழிப்பண்ணையில் கிடைக்கும் லாபத்தை பிரித்துக்கொள்வதில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் சம்பளம் பெறும் சேக்குக்கு , கோழிப்பண்ணையில் இருந்து அதிக இலாபம் கிடைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஹசீனா, நான் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதால் அதற்காக அதிக தொகை தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், இதற்கு சேக் மறுப்பு தெரிவித்த காரணத்தால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது பிரச்சனையாகியுள்ளது. இதனால் கோபம் கொண்ட ஹசீனா தனது காதலனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கோழிப்பண்ணைக்கு சேக்கை வரவழைத்து, புதுவிதமாக உறவு கொள்ளலாம் எனக்கூறி கட்டிலில் கட்டிவைத்துள்ளார். இதனை நம்பி ஷேக்கும் படுத்துள்ளார். பிறகு பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார்.இதனைத்தொடர்ந்து காவல்நிலையம் சென்று, மேலே கூறப்பட்ட நடந்த சம்பவங்களை வாக்குமூலமாக அளித்து சரணடைந்துள்ளார்.