தவறான புரிதலை ஏற்படுத்த எத்தனிக்கிறார் கோத்தா- சித்தார்த்தன் எம்.பி

தனது அர­சியல் நல­னுக்­காக முர­ணான கூற்­றினை வெளிப்­ப­டுத்தி தவ­றான புரி­தலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ எத்­த­னிப்­ப­தாக புளொட் அமைப்பின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தரு­ம­லிங்கம் சித்­தார்த்தன் சீற்­ற­மான கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார்.

புளொட் அமைப்­பி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை களைந்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து கொள்வேன் என சித்­தார்த்தன் தன்னிடம் தெரி­வித்­த­தாக கோத்­தா­பய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்­ளமை தொடர்­பாக கருத்து வெளி­யி­டும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

2009ஆம் ஆண்டின் இறு­திக்­கா­லப்­ப­கு­தியில் புளொட் அமைப்­பி­ட­மி­ருந்த ஆயு­தங்­களை கைய­ளிக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அச்­ச­ம­யத்தில் எமது அமைப்பு ஆயு­தங்­களை கைய­ளித்து விட்­டது.

யுத்­தத்தின் பின்­ன­ரான சூழலில் ஆயு­தங்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யமும் எமக்கு இருக்­க­வில்லை. அதே­நேரம் 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8ஆம் திகதி வவு­னியா நகர சபைக்கும், யாழ்.மாந­கர சபைக்கும் நடை­பெற்ற தேர்­த­லிலும் நாம் தனித்து போட்­டி­யிட்டோம்.

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு ஏப்­ரலில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் நாம் தனித்தே போட்­டி­யிட்டோம்.

யுத்தம் நிறை­வ­டைந்த சூழலில் தமிழர் உரி­மைப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்ட அனைத்து தரப்­புக்­களும் ஒன்­றி­ணைய வேண்டும் என்ற கோரிக்­கைகள் அதி­க­ரித்­தன.

யுத்­தத்தின் பின்­ன­ரான நிலையில் தமிழ் மக்­களின் உரி­மைக்­காக போரா­டிய தரப்­புக்கள் பல­வீ­ன­மான நிலையில் இருப்­பது பொருத்­த­மா­ன­தல்ல என்­ப­தையும் நாம் உணர்ந்­தி­ருந்தோம். இத­ன­டிப்­ப­டை­யிலும் கொள்­கை­ரீ­தி­யான இணக்­கத்தின் பேரி­லுமே 2011ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்தோம்.

ஆகவே முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ குறிப்­பி­டு­வது போன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்தமைக்கும், ஆயு­தங்­களை கைய­ளித்­த­மைக்கும் எவ்­வி­த­மான தொடர்­பு­களும் கிடை­யாது. அவரைப் பொறுத்­த­வ­ரையில் அர­சியல் நலன்­க­ளுக்­காக முற்­றிலும் மாறு­பட்ட கருத்­துக்­களை முன்­வைக்­கின்றார்.

இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளும், தமிழ் மக்களிடத்திலும் தவறான புரிதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவே எத்தனிக்கின்றார். ஆகவே எமது ஆயுதக்களைவு சம்பந்தமான அவருடைய கருத்துக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றார்.