பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போது சில பெயர்களை தவிருங்கள் ! இல்லையேல் தண்டனை!

ஒரு மனிதனை அடையாளப்படுத்தக் கூடியது அவனது பெயர்.  அப்படிபட்ட பெயரில் குறிப்பிட்ட சில பெயர்களை வைத்தால் சில உலக நாடுகள் தண்டனை வழங்கும்.  அவ்வாறு தண்டனை வழங்கப்படும் பெயர்களும் அதற்கான காரணமும்

01- அடொல்ப் ஹிட்லர் ( adolf hitler )

hitler  பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போது சில பெயர்களை தவிருங்கள் ! இல்லையேல் தண்டனை! hitler

ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடொல்ப் ஹிட்லர், இவருடைய பெயரை வைப்பதற்கு 1943 ஆம் ஆண்டு ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

அதனையும் மீறி பெயர் வைத்தல் உடனடியாக அப்பெயரை மாற்றிவிட வேண்டும் இல்லையென்றால் தண்டனை வழங்கப்படும். மேலும் ஹிட்லர் இறப்பதற்கும் காரணமாக இருந்த சயனைட் மாத்திரையின் (Cyanide) பெயரையும் பல உலக நாடுகளில் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

02- மெசியா (Messiah)

massiah  பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போது சில பெயர்களை தவிருங்கள் ! இல்லையேல் தண்டனை! massiah

2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஏழு வயது சிறுவனிற்கு மெசியா என்ற பெயரை அவனது பெற்றோர்கள் அவனுக்கு வைத்தனர். பின் இந்த பெயர் வைத்ததற்காக அச் சிறுவனின் பெற்றோர் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

காரணம் மெசியா என்பது இயேசுக் கிறிஸ்துவின் பெயராகும் எனவே அந்த பெயரை மற்றுமொருவருக்கு சூட்டுவதற்கு முடியாது என நீதிமன்றத்தினால்  தடை விதிக்கப்பட்டது.

மெசியா என்னும் பெயர் குறிப்பாக கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய சமயம் சார்ந்த பெயர் ஆகும், மெசியா என்றால் ஒரு கூட்டத்தினருக்கு விடுதலை அளிப்பவர் என்று பொருள்படும்.

akuma  பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போது சில பெயர்களை தவிருங்கள் ! இல்லையேல் தண்டனை! akuma103- அகுமா (akuma)

 

ஜப்பானில் இரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அகுமா என்று பெயர் வைத்தனர். பின்னர் அயலவர்கள் உறவினர்களுக்கு இதை கூறியதும்  அவர்கள் பயந்து ஜப்பான் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்தனர்.

விசாரித்த பின் அகுமா என்கின்ற பெயரை இனி ஜப்பானில் யாரும் வைக்கவும் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை சட்டம் உத்தரவிடப்பட்டது. குழந்தையின் பெயரும் மாற்றி வைக்கப்பட்டது.

அகுமா என்றால் ஜப்பானிய கதைகளில் வரக்கூடிய   இராட்சத பேய் ஆகும். மேலும் ஸ்ட்ரீட் பயிட்டர் விளையாட்டில் வரக்கூடிய பிரசித்தி பெற்ற கதாப்பாத்திரமும் ஆகும்.

04- ஹரி பொட்டர்

harry_potter  பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போது சில பெயர்களை தவிருங்கள் ! இல்லையேல் தண்டனை! harry potter

நாம் அனைவரும் அறிந்த பிரசித்தி பெற்ற இந்த பெயரை மெக்ஸிகோ நாட்டில் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது இது மட்டும் அல்லாது பல நகைச்சுவை, திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்களில் வரக்கூடிய பல பெயர்களை வைப்பதற்கு இந்நாட்டில் தடை.

05- மலக் 

சவுதி அரேபியாவில் மலக் என்கிற பெயரை வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மலக் என்றால் தேவதை, வானவர்கள் என்று பொருள்படும் எனவே இந்த பெயரை சவுதி அரேபியாவில் வைப்பதற்கு தடை. மீறி வைத்தல் கடுமையான தண்டனை மட்டும் கிடைக்கும்.