புடலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதனை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துகள்
ஆற்றல் – 86.2 கிலோ கலோரி
கொழுப்பு – 3.9 கிராம்
சோடியம் – 33 மி.கி
பொட்டாசியம் – 359.1 மி.கி
நார்ச்சத்து – 0.6 கிராம்
புரதம் – 2 கிராம்
விட்டமின் ஏ 9.8 %
விட்டமின் பி6 – 11.3 %
விட்டமின் சி – 30.6%
கால்சியம் – 5.1 %
இரும்புச்சத்து – 5.7%
மருத்துவ பயன்கள்
1. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது.
2. காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.
3.அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
4. ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.
இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
குறிப்பு:
புடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம்.
புடலங்காயின் வேர்ப்பகுதிகளும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கருவைப் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், புடலை வேரைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.