பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலமாக ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பிறகு பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று அன்றாட தேவைகளுக்கும் பேஸ்புக் வலைதளத்தின் பயன்பாடு அவசியமாகி விட்டது. பல்வேறு நல்ல விஷயங்கள் இதன் மூலம் ஏற்பட்டாலும் பல விபரீதங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன.
சென்னையின் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு என்பவரும் தூத்துக்குடியை சேர்ந்த மந்திரமூர்த்தி என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களானார்கள்.
தினேஷ் பாபுவிற்கு ஓரினச்சேர்க்கையில் ஆர்வமிருப்பதை தெரிந்துக்கொண்ட மந்திரமூர்த்தி உடலுறுவுக்காக நேரில் சந்திக்க வற்புறித்தியுள்ளார். அதற்கான வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தனியாக அறை எடுத்து தினேஷ் பாபு தங்கியுள்ளார்.