திருச்சி அருகே வேளாண்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பூபதி கண்ணன், இவரது மனைவி அனுராதா, இவர்களுக்கு இதிலா(வயது 16) என்ற பெண் இருக்கிறார்.
பூபதி கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேளாண்துறை தனி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருச்சியின் மாத்தூர் காட்டுப்பகுதியில் கடந்த 28ம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், பூபதி கண்ணன் காரில் பெண்ணின் ஆடைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
எனவே இக்கொலையில் பெண் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அவரது அலுவலத்தில் பணிபுரியும் சௌந்தர்யா என்ற பெண் காரில் செல்வது பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், எனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத பெற்றோர், சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
எங்களுக்கு இரு குழந்தைகள் பிறந்த நிலையில், முதல் காதலனை என்னால் மறக்கமுடியவில்லை.
என் கணவருக்கு தெரியாமல் அவருடன் பழகி வந்தேன், இதை தெரிந்து கொண்ட சுரேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
எனவே கடந்த 2011ம் ஆண்டு கருணை அடிப்படையில் எனக்கு வேலை கிடைத்தது, இதற்கு ஏதுவாக இங்கேயே குழந்தைகளுடன் குடிபெயர்ந்தேன்.
இங்கே வந்ததும் பூபதி கண்ணனுடன் தொடர்பு ஏற்பட்டது, அவரது குடும்பத்தில் பிரச்சினை இருந்ததால் என்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.
இந்நிலையில் வேறொரு நபருடன் எனக்கு பழக்கமானது, இதை அறிந்த பூபதி பாண்டியன் என்னை கண்டித்தார், இது எனக்கு பிடிக்கவில்லை.
சம்பவ தினத்தன்று, மாத்தூர் காட்டுப் பகுதிக்கு சென்று தனிமையில் இருந்தோம், அப்போது சிறுநீர் கழிக்க சென்ற போது கத்தியால் குத்திக் கொன்றேன் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சௌந்தர்யாவை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர். இப்படியும் பெண் இருப்பாளா?